குப்பைகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் , வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்பு.
Update: 2023-12-15 02:47 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான, விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து வணிகர்கள் மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் என, பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குப்பைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சுகாதார அலுவலர்களுக்கு , புதியதாக தொலைபேசி மற்றும் whatsapp எண்கள் துவங்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், உள்ள குப்பைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், என ஆட்சியர் கருத்து தெரிவித்தார். இதன் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் மயிலாடுதுறை சுகாதாரமான நகரமாக மாற்ற ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.