மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

Update: 2024-04-27 03:49 GMT

உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் ‘என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி தெரிவித்ததாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயர்கல்வி தொடர்பான ஆலோசனை முகாம்கள் வருடத்திற்கு மூன்று முறை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது. இந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Mass Movement For Transformation (MMT) And Nurture என்ற தன்னார்வ இயக்கங்கள் பிற தன்னார்வ இயக்கங்களுடனும், துறையுடன் இணைத்து நடத்தப்படுகிறது. மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து NURTURE AND MMT இயக்கங்களின் கல்வியாளர் மற்றும் பேச்சாளர் ஆ.அர்னால்டு பிரவுன், அவர்களால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News