குழந்தை திருமண சட்டம் குறித்த விழிப்புணர்வு
ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, குழந்தை திருமண சட்டம் குறித்து போலீஸ் எஸ்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது குழந்தை திருமண சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய எஸ்பி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களை ஒருங்கிணைத்து புதூர் நாடு கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும்.
அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறு கள்ள துப்பாக்கி வைத்திருக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு அறிவுரை வழங்கினார் மேலும் 18 வயது பூர்த்தி அடையாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர் செந்தில், திருப்பத்தூர் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ரேகாமதி. வனத்துறை அலுவலர் ரமேஷ், மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது