குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
இனாம் கல்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் அவர்களுக்கான நான்குவகை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை குறித்தும் குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தல், குழந்தைகள், நலன் சார்ந்த சட்டங்கள்,குழந்தை திருமண தடைச் சட்டம்,குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
குழந்தைகள் மையப் பணியாளர் புஷ்பலதா குழந்தைகளின் சுகாதாரம் ஊட்டச்சத்து இணை உணவு குறித்து விழிப்புணர்வு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.