திட்டச்சேரி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-12 09:39 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு பள்ளியில் மாணவர்களுக்குபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கலந்துகொண்டு கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவி வரும் வதந்திகள் குறித்தும்,பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது,பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள்,பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணர்வு குறித்து பேசினார்.

ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ- மாணவிகள் 100 மற்றும் உங்கள் எஸ்.பி உடன் பேசுங்கள் 8428103090 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News