விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது

Update: 2024-02-20 10:03 GMT

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கலைப்பயணம் துவங்கப்பட்டது இந்த விழிப்புணர்வு பிரச்சார கலை பயணத்தைநிர்வாக இயக்குனர் குழந்தைவேல் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் கொடியசைத்து விழிப்புணர்வு கலைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கலைப்பயணத்தின் பொழுது பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலத்தில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது என்றும், மேலும் நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிலம் நச்சுத்தன்மை அடைவதோடு அவை நிலத்தில் தங்கி மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு மட்டுமல்லாமல் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மேலும் பிளாஸ்டிக்கை எரிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் டையாக்சின் என்ற நச்சுப்புகை காற்றில் கலந்து மாசுபடுவதோடு மட்டும் அல்லாமல் அந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய் ஆகிய கொடிய நோய்களுக்கு ஆளாக நேரிடவதாகவும் ஆகையால் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதை தடுக்க வேண்டும், மேலும் வனத்துறைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் அவற்றை உண்ணும் வனவிலங்குகளும், பறவைகளும் இறக்கின்றன.

இதனால் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் அவைகளை உண்ணும் கடல்வாழ் உயிரினங் களும் இறக்கின்றன என்றும் எனவே பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்பற்றியும், ஆகையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கலைநிகழ்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News