சங்ககிரியில் விழிப்புணர்வு பேரணி

சங்ககிரியில் இருசக்கர வாகனத்தின் 500க்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-30 09:39 GMT

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேசிய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறை துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்... சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்துதுறை சார்பில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார்.சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியில் காவல் துறையினர்,

இருசக்கர வாகன முகவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, அரசு போக்குவரத்து கழகம், தனியார் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வி.என்.பாளையம், பழைய பேருந்து நிலையம், டி.பி.சாலை வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி பயணியர் ஆய்வு மாளிகை பகுதியில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைகவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது சங்ககிரி வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் புஸ்பா, செந்தில்குமார், போக்குவரத்து ஆய்வாளர் ஹேமலதா, உதவி ஆய்வாளர் உதயகுமார், உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News