மாவட்ட சமரசம் மற்றும் இணக்க முறை மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்ட சமரசம் மற்றும் இணக்க முறை மையத்தின் சார்பில் தற்போது சமரச வாரத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
Update: 2024-04-10 05:07 GMT
விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்ட சமரசம் மற்றும் விளக்க முறை மையத்தின் சார்பில் தற்போது சமரச வாரம் 08-04- 2024 முதல் 13-04-2024 வரை அனுசரிக்கப்பட்டு வருகின்றது.இந்தநிலையில் சமரச வாரத்தை முன்னிட்டு இன்று 10 - 04 - 2024 காலை ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது. சமரசமாக செல்வது குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.