காவல்துறை சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி!
புதுக்கோட்டை காவல்துறை சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2024-03-01 05:15 GMT
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டிஎஸ்பி ராகவி கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் சார்பில் ATM PIN, CVV NO, AADHAAR CARD என்னை பாதுகாப்பாக வைக்கவும், எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், ரகசிய குறியீடு எண்ணெய் டெபிட், கிரெடிட் கார்டு மீது குறித்து வைத்துக் கொள்ள வேண்டாம், இணையத்திலோ, சமூக வலைத்தளத்திலோ, அலைபேசியிலோ உங்களது சுய விபரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம், அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையோ, குறும் செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம், இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருங்கள் அவை போலியாக கூட இருக்கலாம், தங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக மீசோ, நாப்டோல் - ல் இருந்து வரும் கடிதம் மற்றும் லிங்கை நம்பி பணம் கட்டாதீர், லோன் ஆப், இன்வெஸ்ட்மென்ட் ஆப் - களை நம்பி ஏமாற வேண்டாம், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தருவதாக வரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் - களை நம்பி ஏமாற வேண்டாம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், Olx- ல் குறைந்த விலைக்கு டிவி, கார், பைக், செல்போன் விற்பனைக்கு உள்ளது நம்பி ஏமாற வேண்டாம் மற்றும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அணுக வேண்டும், மோசடி புகார்களுக்கு www.cybercrime.gov. in என்ற இணையத்தில் தெரிவிக்கலாம் எனவும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டிஎஸ்பி ராகவி கொடியசைத்து துவக்கி வைத்த பேரணி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, மேலராஜ் விதி வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது, மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கினர்.