பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

Update: 2023-12-12 11:03 GMT

விழிப்புணர்வு பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் ரவி எல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கீழ்பென்னாத்தூர் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சுகந்தி வரவேற்றார். அப்போது மகளிர் திட்ட பெண்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றனர்.

Advertisement

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் 100க்கும் மேற்பட்ட மகளிர்திட்ட பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை அடைந்தது. இதனையடுத்து ஒன்றிய அலுவலக வளாகத்தில்மகளிர் திட்ட பெண்கள்விழிப்புணர்வு குறித்த கோலங்கள் வரைந்திருந்ததை விஜயலட்சுமி பார்வையிட்டு முதல் 3 இடங்களை தேர்வு செய்ய இதற்கான பரிசுகளை உதவி திட்ட அலுவலர் ரவி எல்லப்பன் வழங்கினார். இதில் மண்டல துணை தாசில்தார் மாலதி,சமூக நலத்துறை வட்டார விரிவாக்க அலுவலர் விஜயகுமாரி, ஊர் நல அலுவலர்கள் இந்திராகாந்தி,மாதவி மற்றும் மகளிர் திட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார் -

Tags:    

Similar News