போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-27 06:11 GMT

பேரணி 

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை (26.06.2024) முன்னிட்டு பொதுமக்களிடையே போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி நாகப்பட்டினம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் துறையினர் சார்பாக நாகப்பட்டினம் A.D.M. மகளிர் கல்லூரி மாணவிகள், துணை ஆட்சியர், மதுவிலக்கு ஆயத்தீர்வை (கலால்) துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைத்து சுமார் 500 நபர்கள் வெளிப்பாளையம் அவுரித்திடலில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் கொடியசைத்து துவங்கி வைத்தும், விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு பதாகைகளுடன் செல்லும் விழிப்புணர்வு பேரணியானது நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
Tags:    

Similar News