மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தர்மபுரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பேரணியை மருத்துவர் சுஜாதா துவக்கி தொடக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நான்குரோடு வழியாக அரசு மருத்துவமனை அருகே முடிந்தது. பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் செவிலியர்கள் கலந்து கொண்டு கண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்தும், கண் தானம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பாது இருப்பது குறித்தும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் கிருஷ்ணாபாரா மெடிக்கல் கல்லூரி கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் செந்தில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.