புவி வெப்பமயமாவதை தடுக்க விழிப்புணர்வு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புவி வெப்பமயம் ஆவதை தடுக்க மரக்கன்றுகள் நடுவது வலியுறுத்தி ஸ்கேட்டிங் உலக சாதனைசெய்த மாணவர்கள்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிரீன்ஃபீல்ட்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, சுந்தரபாண்டியம் விவேகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி சுந்தரபாண்டியத்தில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு புவி வெப்பமயம் ஆவதைத் தடுக்க மரக்கன்று நடுவதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தரபாண்டியம் விவேகா பள்ளி முதல்வர் ஆனந்தலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.பள்ளித்தாளாளர் பெரியமகாலிங்கம் தலைமை தாங்கினார். அலையன்ஸ் மாவட்ட துணை ஆளுநர் பொன்.சுப்புராஜ் மாரியப்பன், ரோட்டரி சங்கத் துணை ஆளுநர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி வனப்பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, வனச்சரக அலுவலர் மனோரஞ்சிதம், அரசு வழக்கறிஞர் அன்னக்கொடி, பேராசிரியர் டாக்டர் சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கிரீன்ஃபீல்ட்ஸ் பள்ளி முதல்வர்.நல்லதாய் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், பெற்றோர்களும், ஆசிரியைகளும் கலந்து கொண்டார்கள்.