விழிப்புணர்வு பயிற்சி; வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு திறப்பு

திருவண்ணாமலையில் பயன்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-15 16:02 GMT

 திருவண்ணாமலையில் பயன்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாளகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து பயிற்சிக்கும் மற்றும் வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 10% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று 15.12.2023 காலை 10.00 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு உரிய காவல் துறை பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி, இவ்விழிப்புணர்வுகள் வரும் 18.12.2023 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்படும் வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பின்வரும் சட்டமன்ற தொகுதிகளின் தலைமையிடங்களில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செயல்முறை விளக்கமளிக்க பிரத்யேகமாக மையம் (EVM Demonstration Centre) அமைக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்தலில் வாக்களிப்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சாப்ஜான், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News