அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; அழைப்பிதழ்கள் வழங்கல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்களை ராசிபுரம், சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பா.ஜ.,வினர் வழங்கி வருகின்றனர்.

Update: 2024-01-04 05:28 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பிஜேபி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்களை பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். அதன்படி பிஜேபி மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் ஆர்.டி.இளங்கோ, சுகன்யா நந்தகுமார், ஆகியோர் தலைமையில் ராசிபுரம் பன்னிரண்டாவது(12) வார்டு மற்றும் 15.வது வார்டு பகுதிகளில் நிர்வாகிகளுடன் நேரில் சென்று அனைத்து பகுதிகளிலும் வழங்கினர். இந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் கௌதம், மாணிக்கம், அய்யாவு, வழக்கறிஞர் சிவா லீலா ஜோதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News