ஆயுதபூஜை - வாட்டர் சர்வீஸ் செய்ய குவிந்த வாகனங்கள்

ஆயுதபூஜையையொட்டி வாட்டர் சர்விஸ் ஸ்டேஷன்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுத்தம் செய்வதற்காக குவிந்துள்ளன

Update: 2023-10-23 08:15 GMT

காத்திருக்கும் வாகன ஓட்டிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்பதால் இன்று பொது மக்கள் அனைவரும் தங்களின் தொழிலுக்கு பெரும் துனையாக இருக்கும் ஆயுதங்களை சுத்தம் செய்து தெய்வங்கள் முன் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் கல்வி கடவுளான சரஸ்வதிக்கு முன்பு தாங்கள் பயிலும் புத்தகங்களை வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் இரு, நான்கு சக்கர வாகனங்களை சுத்தம் செய்ய சர்வீஸ் ஸ்டேசன்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். அதிகளவில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்ய குவிக்கப்பட்டதால் அனைத்து சர்வீட் ஸ்டேசன்களுமே சர்வீஸ் செய்ய முடியாமல் தினறி வருவதுடன் இரு, நான்கு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நேரம் ஒதுக்கி டோக்கன் போட்டு தருகின்றனர் சர்வீஸ் ஸ்டேசன் ஊழியர்கள். ஒவ்வொரு சர்வீஸ் ஸ்டேசன்களிலும் குறைந்தது 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்து இருப்பதால்  அப்பகுதி முழுவதும் வாகன நெரிசலாக காணப்படுகிறது
Tags:    

Similar News