ஓசூரில் அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா
ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் அன்புபதி அறக்கட்டளையின் சார்பில்192-வது அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா நடைபெற்றது.
Update: 2024-03-03 14:24 GMT
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சென்னத்தூரிலுள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் அன்புபதி அறக்கட்டளையின் சார்பில்192-வது அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு வைகுண்ட வாசகருக்கு சிறப்பு வழிபாடு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வைகுண்ட சுவாமி பற்றி அனைத்து பக்தர்களும் பஜனை செய்து ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலமானது சென்னத்தூர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் கோயிலை அடைந்தது.பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதையடுத்து வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் செந்தில்முருகன், நிர்வாகிகள் தர்மேந்திரா, ராமச்சந்திரன், கண்ணன், அரவிந்த் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.