பள்ளிவாசலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள்
வேம்பார்பட்டியில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக மொகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு வந்தனர்.;
Update: 2023-12-28 06:06 GMT
பள்ளிவாசலில் அய்யப்ப பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள வேம்பார்பட்டியில் இந்து,முஸ்லீம், கிறிஸ்டின் என மும்மதத்தினரும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேம்பார்பட்டியில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வருடந்தோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.இதையடுத்து இந்த வருடமும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.இதையடுத்து மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வேம்பார்பட்டியில் உள்ள மொகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு வந்தனர். இதையடுத்து பள்ளிவாசல் அஷ்ரத் பாத்யா ஓதி துவா செய்தார்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.