பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-07 07:24 GMT
ஆர்ப்பாட்டம்
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் நேற்று திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் , தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை.முபாரக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.