புதுக்கோட்டையில் குப்பைகளால் துர்நாற்றம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கம்பன் நகர் செல்லும் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களால் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், மேலும் மழை நேரங்களில் பெய்யும் மழை நீர் இந்த குப்பையில் தங்கி விடுவதால் அங்கு பன்றி உள்ளிட்ட விலங்குகள் அங்கு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.
அதனை உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை சரி செய்யவில்லை என்றும் மேலும் இந்த குப்பை கூழங்களால் அருகில் ஏராளமான வீடுகள், காவலர் பயிற்சி பள்ளி, ஊராட்சி மன்றம், உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் இருப்பதால் அங்கு பணிபுரியவர்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே நிர்வாகம் உடனடியாக அந்த குப்பை கூழங்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.