காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்
காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 13:58 GMT
காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறதையொட்டி அதற்கான பணிகள் செய்வதற்கு பாலாலயம் நேற்று நடந்தது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதை முன்னிட்டு கோயிலை சீரமைக்கும் பணிகள் செய்ய நேற்று பாலாலயம் நடந்தது. விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி, 2ம் கால வேள்வியை தொடர்ந்து திருக்குடங்கள் ஞான திருவுலா, திருக்குடங்களிலிருக்கும் திருக்குட சக்தியை திருப்படங்களில் எழுந்தருள செய்தல், திருமறை, திருமுறை விண்ணப்பம் போரொளி வழிபாடு நடந்தது. திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு திருநீறு, திரு அமுது வழங்குதல் நடந்தது.