பால்குட திருவிழா- பக்தர்கள் பங்கேற்பு
செந்துறையில் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து ஓம்சக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.;
Update: 2024-02-01 08:09 GMT
ஊர்வலம்
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரிலுள்ள பெருமாள் கோவில் தெருவிலுள்ள பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். இதனையொட்டி பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்துகொண்டு செந்துறையின் முக்கிய வீதிகளில் இன்று பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் திருக்கோவிலை சென்றடைந்த பின்பு பொதுமக்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யபட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில் செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.