மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் !
பிரான்மலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Update: 2024-03-08 12:09 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் இருந்து பிரான்மலை மலை உச்சியில் 2500 அடி உயரத்தில் உள்ள வேலாய் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு 42 ஆம் ஆண்டு பால்குட ஊர்வலம் வெகுவிமர்சையாக நடபெற்றது. விழாவிற்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையேற்று மலை அடிவாரத்தில் உள்ள மங்கை பாகர் தேனம்மை திருக்கோவிலில் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உற்சவரான முருகனுக்கு தீபாராதனை காண்பித்து பால்குட ஊர்வலத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் துவக்கி வைத்தார். பால்குட ஊர்வலம் பிரான்மலை சுற்றியுள்ள ஐந்து ஊர் கிராம மக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் என பாலமுருகனுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக பிரான்மலை முக்கிய வீதிகள் வழியாக மலை அடிவாரம் சென்றடைந்தனர். அங்கிருந்து அரோகரா, அரோகரா கோஷமிட்டு 2500 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்து கொண்டு மலை ஏறத் துவங்கினர்.