கும்பக்கரை அருவியில் 41வது நாளாக குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் இன்றுடன் 41வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-13 15:18 GMT

கும்பகரை அருவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது தான் கும்பக்கரை அருவி . மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் மற்றும் கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி வருகின்றது. கும்பக்கரை அருவிக்கு தேனி மாவட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து குளித்து மகிழ்ந்து செல்வர்.

இந்நிலையில் கடந்த மாதம் கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் மூன்றாம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அன்று முதல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியல் குளிக்கவும் உள்ளே சென்று பார்க்கவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர் .

இந்நிலையில் கும்பக்கரை அருவிகள் தொடர்ந்து இன்றுடன் 41 வது நாளாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News