மாணிக் தாகூர் பதவி பிரமாணம் ஏற்க தடை : தேமுதிக கோரிக்கை
விருதுநகரில் வெற்றி பெற்றுள்ள மாணிக் தாகூர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக வலியுறுத்தியுள்ளது.;
Update: 2024-06-07 04:34 GMT
பைல் படம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதுபோல மறுவாக்கு எண்ணிக்கை நடந்து முடியும் வரை முறைகேடாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணிக் தாகூர் பதவி பிரமாணம் ஏற்கக் கூடாது என இடைக்கால தடையை, தேர்தல் ஆணையத்திடமோ அல்லது உயர்நீதி மன்றத்திலோ தேமுதிக சார்பில் தடை உத்தரவு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.