வாழை இலை, வாழைத்தார் விலை உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை தார் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய விவசாயமான வாழை விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வாழைத்தார் மற்றும் வாழை இலை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் மற்றும் வாழை இலை குறைவான அளவில் வருவதன் காரணமாக வாழைத்தார் சந்தைக்கு தேனி சத்தியமங்கலம் திண்டுக்கல் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாட்டு வாழைத்தார்கள் மற்றும் செவ்வாழைத்தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது ஒரு நாட்டு வாழைத்தார் 1200 ரூபாய் வரையும் சக்கைத்தார் 800 ரூபாய் வரையும் செவ்வாழைத்தார் 800 ரூபாய் வரையும் கோழி, ஏத்தம்பழம் உள்ளிட்ட தார்களின் விலை 500 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
இதேபோன்று வாழை இலையும் வரத்து குறைவு காரணமாக வாழை இலை பெரிய கட்டு ரூபாய் 2500 ரூபாய் வரையும் சிறிய கட்டு ரூபாய் 1500 ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது.