மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலில் ரூ.74 லட்சம் காணிக்கை வசூலானது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள் அவ்வபோது திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ் பூசாரி, ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.
இதில் 74 லட்சத்து 17 ஆயிரத்து 570 ரூபாய் ரொக்கமும், 243 கிராம் நகைகளும், 1505 கிராம் வெள்ளி பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது அறங்காவலர்கள் மதியழகன் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் உடனி ருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.