நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்!

நாமக்கல் நகரில் செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து, 102 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-05-24 01:04 GMT

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன் ஆகியோரின் உத்தரவின் பேரில், நாமக்கல் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தலைமையில் சேலம் சாலை, மெயின் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது சாலையோர வியாபாரிகள், பூ மற்றும் பழக்கடைகள்,மொத்த வியாபார கடைகள் மற்றும் ஹோட்டல், பேக்கரிகள் ஆகிய வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது .

ஆய்வு மேற்கொள்ளபட்ட மூன்று நாட்களில் மொத்தம் 102 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளருக்கு ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது, பின்பு வியாபாரிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் விரைவில் மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த சோதனையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கார்த்திக், குமுதன், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், களப்பணி உதவியாளர் சபரிநாதன் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News