வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்
துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் ,செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டுக்கு தலைவர் பதவிக்கு மட்டும் போட்டி நிலவியது .
இதனால் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது தலைவர் பதவிக்காக வழக்கறிஞர் உத்திராபதி மற்றும் வழக்கறிஞர் தென்னரசு ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.நீதிமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 120 வாக்கு பதிவானது இதில் வழக்கறிஞர் உத்திராபதி 81 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்த்து போட்டியிட்ட வழக்கறிஞர் தென்னரசு 39 வாக்குகள் பெற்றிருந்தார். மற்ற பதவிகளான செயலாளர் சுகுமார். பொருளாளர் சிதம்பரஜோதி, துணைத் தலைவர் கவின் குமார், இணை செயலாளர் பாஸ்கரன். செயற்குழு உறுப்பினர்கள் பாஹிரதி, நிர்மல் குமார் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.