தொடர் விபத்து நடக்கும் இடத்தில் பேரிகாட் அமைப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டையில் தொடர் விபத்து நடக்கும் இடத்தில் பேரிகாட் அமைக்கபட்டது.

Update: 2024-06-02 10:50 GMT

தொடர் விபத்து நடக்கும் இடத்தில் பேரிகாட் அமைப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டை அகலப்படுத்தும் பணி நிறைவு பெற்று சென்டர் மீடியேட்டர் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் வரும் வாகனங்கள் மிக வேகமாக வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன.

மேலும் அண்ணா நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் காவல்துறை சார்பில் தொடர் விபத்து நடக்கும் இடத்தில் ரோட்டில் பேரிகாட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News