தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎட், எம்.எட்., நேரடிச்சேர்க்கை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-05 02:39 GMT

தமிழ்ப் பல்கலைக்கழகம் 

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (B.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (M.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 31 ஆகும்.  சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைக்கு ஒருசில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பதிவாளர் (பொறுப்பு) சி.தியாகராஜன் தெரிவித்தார்.
Tags:    

Similar News