தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., மாணவர் சேர்க்கை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை, ஜூன்.03 திங்கள்கிழமை முதல் துவங்கப் பெற்றுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் மாணவர்களுக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கு.சின்னப்பன், முனைவர் ஆனந்த் அரசு, உடற்கல்வி ஆசிரியர் செ.பிரபாகரன் மற்றும் உதவியாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in, தொலைபேசி எண் 04362-226720 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் பதிவாளர் (பொறுப்பு) சி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.