இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

Update: 2024-01-28 11:14 GMT

பறிமுதல் செய்யப்பட பீடி இலைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள், களைகொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,  தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தருவைகுளம் தெற்கு கல்மேடு பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கடற்கரையில் நின்று காெண்டிருந்த Tata  Eicher சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 67 மூடைகளில் சுமார் 2.5 டன் பீடி இலை இலைகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தஞ்சாவூர் சேர்ந்த ஜெயபால் மகன் சேகுவாரா (24) என்பவரை போலீசார் கைது, பீடிஇலைகளுடன் சரக்கு வாகனம்,  இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும். கைப்பற்ற பீடி இலை மூடைகள் மற்றும் வாகனம் தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக தாளமுத்து நகர் மாப்பிள்ளையூரனியைச் சார்ந்த பிரதீப் பாண்டியன், திரேஸ்புரம் சார்ந்த கௌதம், லூர்தம்மாள் புரத்தைச் சார்ந்த சரவணக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News