நம்ம ஊரு தப்பாட்டத்துக்கு குத்தாட்டம் போட்ட பெல்ஜியம் நாட்டினர்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு வந்திருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தப்பாட்டத்திற்கு உற்சாகமாக நடனமாடியதால் பலரும் வியப்புக்குள்ளாகினர்.;

Update: 2024-01-25 08:20 GMT

மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு வந்திருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தப்பாட்டத்திற்கு உற்சாகமாக நடனமாடியதால் பலரும் வியப்புக்குள்ளாகினர். 

  மதுரைக்கு தமிழகத்தின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தந்து வருகின்ற, முக்கிய சுற்றுலா தளமாக உள்ள மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனைக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் இன்று மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் அவரது 441 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் திருமலை நாயக்கர் அரண்மனையில் திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு தமிழக பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,கடம்பூர் ராஜு,மற்றும் பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிக்க வருவதால் தப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது அங்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்க அடிக்கப்பட்ட நம்ம ஊர் தப்பாட்டத்திற்கு உற்சாகமாக சாலையில் நடனம் ஆடினர். பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள் திடீரென சாலையில் நடனம் ஆடிய சம்பவம் அங்கு சுற்றி வேடிக்கை பார்த்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News