கடத்தூர் வார சந்தையில் வெற்றிலை விலை சரிவு

கடத்தூர் வாரச்சந்தையில் மூட்டைக்கு ரூ.3000 வரை விலை குறைந்து வெற்றிலை விற்பனையானது.

Update: 2024-02-26 01:49 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக பிரத்தியேகமான சந்தை நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். இந்த நிலையில் 128 கட்டுகளைக் கொண்டு ஒரு மூட்டை ஆரம்ப விலையாக 14000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20000 ரூபாய் வரையில் விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் 3000 ரூபாய் விலை குறைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் வெற்றிலைகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News