வாரச்சந்தையில் வெற்றிலை விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
வாரச்சந்தையில் வெற்றிலை விலை உயர்வு கடந்த வாரத்தை காட்டிலும் 2000ரூபாய் கூடுதல் விற்பனை செய்யப்பட்டது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் வாராந்தோறும் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர், மணியம்பாடி நல்ல குண்டலஹள்ளி ,கோம்பை, அஸ்தகியூர் ,முத்தனூர்,கேத்திரெட்டிப்பட்டி ,அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி. சுற்றுவட்டார இருபதுக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது, இன்றைய வாரச்சந்தையில் ஆரம்ப விலை 7000 முதல் அதிகபட்சமாக 10000 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் 2000 ரூபாய்க்கு விலை குறைவு , முப்பதுக்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனை நடைபெற்றது. ஒரே நாளில் ரூபாய் 3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்