திமுக ரவுடி கும்பலிடம் கவனமாக இருங்க - பிரேமலதா விஜயகாந்த்

உங்கள் வாக்குகளை கள்ள வாக்குகளாக திமுக ரவுடி கும்பல் மாற்றி விடும். எனவே காலை நேரத்திலேயே சென்று வாக்களியுங்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Update: 2024-04-05 06:45 GMT

பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்  

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.   அதன் அடிப்படையில் நேற்று  இரவு திருவள்ளுர் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் கு. நல்லதம்பியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திரளான தொடர்கள் மத்தியில் தே.மு.தி.க பொது செயலாளர் பிரேம லதா வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், வேட்பாளர் நல்லதம்பி நம்பிக்கை, விசுவாசத்தின் மொத்த சுரூபமாக இங்கு நிற்கிறார் , உண்மை விசுவாசத்திற்காக மட்டுமே மீண்டும் வேட்பாளர் நல்ல தம்பிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியதாகவும் பிரேமலதா தெரிவித்த போது வேட்பாளர் நல்லதம்பி கண்ணீர் சிந்தியபடி மக்களிடம் இரு கரம் கூப்பி வாக்கு சேகரித்தார். 

மேலும் வேட்பாளர் நல்லதம்பி வெற்றி பெற்று வந்தவுடன் முதல் வாக்குறுதியாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை சிறந்த தரமான நிழற்குடை அமைத்து தருவதாக தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையாக கட்டப்படாததால் மழைக்காலங்களில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்படுகிறது எனவே கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேட்பாளர் நடவடிக்கை எடுப்பார் எனவும், கும்மிடிப்பூண்டி பகுதியில் அரசு கலைகல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுப்பார், 

கும்மிடிப்பூண்டியில் பூ விற்பனையாளர்கள் அதிகமாக உள்ளதால் சென்ட் ஃபேக்டரி அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நமது வேட்பாளர் ஏற்ப்படுத்தி தருவார் என்றும் தெரிவித்த பிரேமலதா வரும் 19ஆம் தேதி காலை நேரத்திலே வாக்களிக்க சென்று விடுமாறும் இல்லையெனில் உங்கள் வாக்குகளை கள்ள வாக்குகளாக மாற்றி விடுவார்கள் திமுக ரவுடி கும்பல் என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் கேப்டன் விஜயகாந்த்க்கு  மக்கள் நன்றி கடன் செலுத்த வேண்டிய நேரம் இது இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறி திரளாக பங்கேற்ற தேமுதிக மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News