பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
சங்ககிரி அருகே பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி விழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
Update: 2024-03-04 17:37 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் உலகப்பனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன இதனை அடுத்து பக்தர்கள் ஊர் நல்லா கிணற்றுக்கு சென்று புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் முதலில் பூசாரி தீமிதித்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேற்று கடனை செலுத்தினர்.