பகவதி அம்மன் கோயிலுக்கு கொடிபட்டம், கொடி கயிறு  ஒப்படைப்பு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி மாதம் விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடி கயிறு, கொடி பட்டம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-05-14 04:01 GMT
கன்னியாகுமரி கோவிலில் கொடிப் பட்டம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாக்கான கால் நாட்டு விழா கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.  இதையடுத்து திருவிழா இன்று 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நேற்று 13ம் தேதி மாலை மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக குமரி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சேர்ந்த கயிலியர் குடும்பத்தினர் மேளதாளத்துடன் கொடிக்கயிறு தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து கோவில் மேலாளரிடம் ஒப்படைத்தனர்.  இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கொண்டு வந்து பகவதி அம்மன் கோவில் ஒப்படைக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள்  பாரம்பரியமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News