பகவாண்டிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்!
பகவாண்டிப்பட்டியில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
Update: 2024-06-18 06:24 GMT
பகவாண்டிப்பட்டியில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிபட்டி கோனார் ஊரணி மேல்கரை செல்வ விநாயகர் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 14ஆம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், லஷ்மி பூஜை, கோ பூஜை, அக்குரர் பணம், பூர்ணாகதி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும் வைரவ குழுக்கள் பாலாஜி ஹரி மணிகண்டன் சிவாச்சாரியார்கள் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பகவாண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் விலா ஏற்பாடுகளை பகவண்டிப்பட்டி காயம் பூஞ்சை ஊர் மக்கள் மற்றும் பறக்கும் படை இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.