பகவதி அம்மன் கோயில் திருவிழா!

நத்தம்-கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் கோயிலை சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-04-17 08:39 GMT

திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்- கோவில்பட்டி மேலத்தெரு பகவதி அம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ஆம் தேதி காப்புக் கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

தொடர்ந்து 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலும் மாலையில் கோயிலின் முன் கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 11-ஆம் தேதி கோயிலின் முன் முகூர்த்தக் கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

திங்கட்கிழமை காலை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்று சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

அன்றிரவு காக்கா குளத்தில் பகவதி அம்மன் பூக்கரகத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க நீ வட்டி பரிவாரங்களுடனும் வாண வேடிக்கையுடன் கோயிலை சென்றடைந்தது.

Tags:    

Similar News