பகவதி அம்மன் கோவில் விசாகத் திருவிழா 14 ஆம் தேதி துவக்கம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விசாகத் திருவிழா 14 ஆம் தேதி துவக்கம்.

Update: 2024-05-03 06:50 GMT

விசாகத் திருவிழா 

உலகப் புகழ்பெற்ற முக்கிய கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில்  ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்கான கால் நாட்டு விழா கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து திருவிழா வருகிற 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாளான 13ஆம் தேதி மாலை கொடிபட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படும். பின்னர் இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க கொடி மரக்கயிறு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்படும். பின்னர் மறுநாள் ஒன்றாம் திருவிழாவான 14 ஆம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 8:30க்குள் கொடி ஏற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 23ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு கோலாகலமாக நடக்கும். திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை ஐந்து மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மேலும் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாரதனை, சிறப்பு அன்னதானம், இந்து சமய சொற்பொழிவு உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News