மயூரநாதர் ஆலயத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சப்த ஸ்வரங்கள் நடத்திவரும் 18ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக 5 பரதநாட்டிய குழுவினர் நடன விருந்து அளித்தனர்.

Update: 2024-03-10 15:35 GMT

பரத நாட்டியம் ஆடிய கலைஞர்கள்

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சப்த ஸ்வரங்கள் சார்பில் 18 ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த ஏழாம் தேதி துவங்கி 10ம் தேதியான இன்று வரை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு கோவையை சேர்ந்த லாஸ்யா நாட்டியாலயா குழுவினரும் அதை அடுத்து கிங்கினி டெம்பில் ஆஃப் ஆர்ட்ஸ் பெங்களூர்,

பாரத நாட்டியாலயா சென்னை, நிருத்தியகலா நிகேதன் மும்பை, வினாயகா நாட்டியாலயா சென்னை, மற்றும் விந்தியா அகாடமி பெங்களூர் ஆகிய ஐந்து குழுவினரின் பரதநாட்டியம் இரவு 10.30 நடைபெற்றது ஏராளமான பரதநாட்டிய ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News