பவானி அம்மன் ஆலயத்தில் ரூ.159 கோடியில் கட்டுமான பணி

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

Update: 2024-02-20 01:42 GMT

பவானி அம்மன் கோயில் 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து ஆலய வளாகத்தில் திருப்பணிகளுக்கு அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News