திருக்கோவிலூரில் வேளாண் விரிவாக்க மையத்திற்கான பூமி பூஜை
திருக்கோவிலூரில் வேளாண் விரிவாக்க மையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருக்கோவிலுாரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கான பூமி பூஜை நடந்தது. திருக்கோவிலுார் தாலுகாவிற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, டெண்டரும் விடப்பட்ட நிலையில் நேற்று இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் வரவேற்றார்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். வேளாண் துணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் பொறுப்பு கிருஷ்ணகுமாரி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார், துணை சேர்மன் தானம் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
துணை வேளாண்மை அலுவலர் மொட்டையாபிள்ளை நன்றி கூறினார்