வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு.

Update: 2024-03-10 13:50 GMT

 பூமி பூஜை

நந்திவரம் நந்தீஸ்வரர் கோவில் எதிரில் கோவிலுக்கு சொந்தமான காலி மனைகள் உள்ளன. அந்த இடத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அனுமதியின்றி வாகன பார்க்கிங் அமைக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, காலி இடத்தில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடலாம் என்ற கருத்து நிலவியது.

அதைத் தொடர்ந்து அரசு உத்தரவின்படி அந்த இடத்தில் 15 கடைகள் கட்டுவதற்கு 1. 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கட்டுமான பணிக்காக நேற்று காலை பூமி பூஜை நடந்தது. செங்கல்பட்டு தி. மு. க. , - எம். எல். ஏ. , வரலட்சுமி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் மண்டல துணை கமிஷனர் ஜெயா, உதவி பொறியாளர் முருகவேல் ராஜா, ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர்கள் விஜயன், வெங்கடேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல துணை கமிஷனர் ஜெயா கூறியதாவது: இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு நேற்று பூமி பூஜை போடப்பட்டு பணிகளை துவங்கி இருக்கிறோம். புதிய கட்டுமான பணிகள், ஆறுமாத காலத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். அதன்பின் கடைகளை வாடகைக்கு விடுவது குறித்து அரசின் உத்தரவுக்குப் பின் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News