வெங்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

வெங்கல் ஊராட்சியில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்.

Update: 2024-01-09 13:32 GMT

பூமி பூஜை 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை, மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 15 வது நிதி குழு சுகாதார மானியத்தின் படி சுமார் 1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்,துணை சுகாதார மையம், மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார மையம்,உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்படுத்துவது கொண்டு வர அதிகாரிகளுக்கு அப்போது அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி,எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, சத்தியமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா, வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன்,மாவட்ட பிரதிநிதி வெங்கல் பாஸ்கர்,காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சிவசங்கர், நிர்வாகிகள் ரஜினிகாந்த்,அப்பன், செம்பேடு செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News