திருப்பரங்குன்றத்தில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை
திருப்பரங்குன்றத்தில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 11:53 GMT
பூஜையில் கலந்து கொண்டவர்கள்
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பூங்காவில் 7 லட்சம் ரூபாய் செலவில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பூங்காவில் 99 ஆவது மாமன்ற உறுப்பினராக உசிலை சிவா உள்ளார். மாமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் இல்லாத சூழ் நிலையில் மதுரை மாநகராட்சி நிதி மூலம் புதிய அலுவலகம் அமைக்க ரூபாய் 7 லட்சம் செலவில் பூமி பூஜை நடைபெற்றது. இவ் விழாவில் மதுரை மாநகராட்சி 99 வது மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா, மதுரை மாநாட்சி மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் ,
மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் சாலமன், 99 வட்ட செயலாளர் சாமிவேல் , சேதுராம் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.