ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

சங்ககிரி அருகே அரசிராமணி பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.;

Update: 2024-03-06 16:44 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசிராமணி செட்டிபட்டி பகுதியில் ரூ55இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் காவேரி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி 7-வது, வார்டு செட்டிப்பட்டி ஓம்காளியம்மன் கோவில் அருகே சரபங்கா நதியில் குறுக்கே 15வது நிதி ஆணைய நிபந்தனையற்ற மானிய திட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய தரை பாலம் அமைத்தல், செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணி செய்தல், மேலும் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் அர.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அரசிராமணி பேரூராட்சித் தலைவர் காவேரி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார், இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் ஜீவானந்தம், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர்கள் முருகேசன், அருள்மொழி, செல்விதங்கவேல், ராணிபழனிச்சாமி, சம்பு ,சின்னதுரை, வார்டு செயலாளர்கள் சுப்பிரமணி, இளங்கோவன், பிட்டர் கணேசன், இளநிலை பொறியாளர் அன்பழகன் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)கிருபாகரன் காண்ட்ராக்டர் சண்முகம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News