சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
பாண்டியங்குப்பம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
Update: 2024-03-06 11:46 GMT
சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட சாலை போடும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் சண்முகம், தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் நந்தினி மோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.